'விஸ்வரூபம் 2' பட டிரைலர் வெளியாகிவிட்டதா? கமல் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசனின் வெற்றி படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டதாக கமல் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கையும் அவர் வெளியிட்டதால் இந்த படம் மிகவிரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தின் டிரைலர் வெளியாகிவிட்டதாக இணணயதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவியது. இதுகுறித்து கமல் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதன்படி "விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானதாக வரும் தகவல் உண்மை இல்லை. இந்த உண்மையை தெரிவிக்கும் கடமை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான இந்தி உரிமையும் எங்களிடம்தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
False news about trailer of VR2. RKFI is bound to inform admirers of progress. We facilitate Tamil VR2's release. We own the Hindi rights
— Kamal Haasan (@ikamalhaasan) June 13, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com