இளைய வயது நடிகருடன் காதலா? கிண்டலடித்த நெட்டிசன்களை அலறவிட்ட நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஒருவர் தன்னைவிட 9 வயது இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக வதந்தி கிளம்பியது. இதையடுத்து நெட்டிசன்கள் நடிகையை பலவாறு விமர்சித்தனர். இதனால் பொங்கிவிட்ட நடிகை தற்போது நெட்டிசன்களை வறுத்தெடுத்து வருகிறார்.
பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் மூன்மூன் தத்தா. இவர் “தாரக் மேத்தா கா ஊல்டா சஷ்மா” எனும் பிரமான இந்தி தொடரில் நடித்து வருகிறார். இதில் மூன்மூன் தத்தாவிற்கு ஜோடியாக ராஜ் அனத்கத் என்பவர் நடித்து வருகிறார். 9 வயது இளம் நடிகரான இவரை மூன்மூன் தத்தா காதலிக்கிறார் என்று வதந்தி கிளம்பியது. இதையடுத்து நெட்டிசன்கள் நடிகையை முகம் சுளிக்கும் அளவிற்கு விமர்சிக்கத் துவங்கி விட்டனார்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மூன்மூன் தத்தா, “என்னை இந்தியாவின் மகள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறேன். நெட்டிசன்கள் செய்த வேலையால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்“ என்று கடுமையாக பேசியிருக்கிறார்.
மேலும் “13 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறேன். ஆனால் என்னை அசிங்கப்படுத்த 13 நிமிடம் கூட ஆகவில்லை. அடுத்த முறை யாருக்காவது மனஅழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ உங்களின் வார்த்தைகள்தான் அதற்கு காரணமா என்று சிந்தித்து பாருங்கள்“ என மூன்மூன் தத்தா தனது சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டு உள்ளார். நடிகை மூன்மூன் தத்தா பதிவிட்ட இந்தக் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் மீண்டும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments