விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதுவா?

  • IndiaGlitz, [Thursday,October 28 2021]

நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவரது திரைப்படங்கள் தொடர்ச்சியாக ரிலீசாகியது என்பதும் இன்னும் ஒரு சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற தொடரை இயக்கிய ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு வெப்தொடரில் நடித்து வருகிறார் என்பதும் அந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தொடருக்கு ’ஃபேக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அமேசான் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் தேசிய விருது பெறுவதற்காக டெல்லி சென்ற விஜய்சேதுபதி, தேசிய விருது பெற்ற உடன் இந்த தொடரின் படப்பிடிப்பில்தான் கலந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடர் வெளியாகும் தேதியை குறித்த அறிவிப்பை விரைவில் அமேசான் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.