அமெரிக்க அதிபர் டிரம்ப் ராஜினாமா? அமெரிக்க பத்திரிகை ஏற்படுத்திய பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளும், பத்திரிகைகளும் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கூறிய நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபரானார். இந்த தேர்தல் முடிவின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் அதிபர் டிரம்ப் ராஜினாமா செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்பின் நடந்த விசாரணையில் இந்த செய்தி வெளியான பத்திரிகை மர்ம நபர்களால் அச்சடிக்கப்பட்ட போலி பதிப்புகள் என்றும், அந்த செய்தியில் மே 1, 2019 என்று அச்சடிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 'எதிர்பாராதது: டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார்” நெருக்கடி முடிவுக்கு வந்தது' என தலைப்பு கொடுக்கப்பட்டு டிரம்ப் தலை தொங்கி சோகத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்பின் வாஷிங்டன் போஸ்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் 'அது ஒரு போலி பதிப்பு என்று தெளிவுபடுத்தியதுடன் இதுபோன்ற செய்தித்தாள் எதுவும் நாங்கள் வெளியிடவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
There are fake print editions of The Washington Post being distributed around downtown DC, and we are aware of a website attempting to mimic The Post’s. They are not Post products, and we are looking into this.
— Washington Post PR (@WashPostPR) January 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout