யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்துவந்த போலி மருத்துவர்!

  • IndiaGlitz, [Saturday,March 27 2021]

தெலுங்கானா மாநிலத்தில் பிஎஸ்சி டிகிரி மட்டுமே படித்த ஒருவர் நகர்ப்பகுதியில் மருத்துவமனை தொடங்கி அதில் பல பெண்களுக்கு மறைமுகமாக கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர் யூடியூப் மற்றும் வீடியோக்களை மட்டுமே பார்த்து கருக்கலைப்பு செய்ய கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர்.

வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹன்மகொண்டா எனும் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திரா ரெட்டி (38) எனும் நபர் புதிதாக மருத்துவமனை துவங்கியுள்ளார். மேலும் இந்த மருத்துவமனைக்கு உள்ளூரில் படித்த சில நர்ஸ்களையும் சட்டீஸ்கர் பகுதியைச் சார்ந்த சில பெண்களையும் வேலைக்கு அமர்த்தி உள்ளார். இந்தப் பெண்களைக் கொண்டு சட்ட முறைகேடாக கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் பெண்களை ஈர்த்து பல சிக்கலான கருக்கலைப்பு ஆப்ரேஷன்களையும் செய்து வந்துள்ளார்.

மேலும் இவருக்கு உரிய படிப்பறிவு இல்லாததால் யூடியூப் மற்றும் சில வீடியோக்களை பார்த்து இந்திரா ரெட்டி கருக்கலைப்பு செய்யக் கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியச் சட்டத்தின் படி கருக்கலைப்பு செய்வது அவசியமான மருத்துவக் காரணங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறைகேடான வகையில் கருக்கலைப்பு நடப்பதைக் கேள்வியுற்ற போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது ஒரு பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்து கொண்டு இருந்த இந்திரா ரெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு இருந்த அந்த பெண்ணை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

போக போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்: காங்கிரஸில் இணைந்த ஷகிலா பேட்டி!

தமிழ் மலையாள திரைப்பட நடிகையும் குக் வித் கோமாளி போட்டியாளர்களில் ஒருவருமான ஷகிலா, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள் என்று பேட்டி அளித்துள்ளார் 

சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகாதீங்க: ரசிகர்களின் கோரிக்கைக்கு 'குக் வித் கோமாளி' கனி அளித்த பதில்!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் ஒருவரான கனி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதும் அவர் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது

வாக்குச் சேகரிப்பில் பெண்ணுக்கு பூச்சூடி மகிழ்வித்த நிதியமைச்சர்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் நேற்று ஒருநாள் பயணமாக புதுச்சேரி வந்து இருந்தார்

ஃபேமிலியுடன் டின்னர்: கீர்த்தி சுரேஷின் வைரல் புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் டின்னர் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது