மக்கள் வெளியேறுவதை தடுக்க சிங்கங்களை சாலையில் விட்டாரா அதிபர்? 

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான நடவடிக்கை எடுத்து வருகின்றது. குறிப்பாக இந்த வைரஸை கட்டுப்படுத்த இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி, மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் செய்வதுதான். அதற்காக சில கண்டிப்பான உத்தரவுகளையும் பயமுறுத்தும் நிபந்தனைகளையும் ஒருசில நாடுகள் விதித்துள்ளன.

ஆனால் என்னதான் சட்டங்கள் இயற்றினாலும் பொதுமக்கள் அதை கண்டு கொள்ளாமல் வெளியே வந்து கொரோனாவினல் சிக்கி மற்றவர்களுக்கும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க சாலைகளில் சிங்கங்களை உலாவவிட்டதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. சிங்கங்களை சாலையில் உலாவவிட்டால் அந்த பயத்தில் மக்கள் வெளியேராமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் அதிபர் இவ்வாறு செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது

ஆனால் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு வீதியில் திரைப்பட படப்பிடிப்புக்காக சிங்கம் வீதியில் உலா விட்டதாகவும் அது குறித்த செய்தி அப்போதே பத்திரிகைகளில் ஊடகங்களில் வெளிவந்துள்ளதாகவும், இந்த செய்தியை கொரோனாவுடன் இணைத்து பொய்யான செய்தியை சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் பரப்பி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இது போன்ற பொய்யான செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்