Fair & lovely யில் இனிமே Fair இருக்காது: பெயர் மாற்றப்படுகிறது!!! காரணம் என்ன தெரியுமா???

  • IndiaGlitz, [Thursday,June 25 2020]

 

ஒரு காலத்தில் மேக் அப் என்றாலே அது Fair & lovely க்ரீம் என்றுதான் இந்தியர்கள் புரிந்து கொண்டனர். காரணம் அந்த அளவிற்கு இந்தியாவில் பல ஆண்டுகளாக Fair & lovely க்ரீம்கள் பயன்படுத்தப் பட்டு வருகிறது. “அழகிய வெள்ளை சருமத்திற்கு Fair & lovely பயன்படுத்துங்கள்” என்று இதன் விளம்பரமும் மிகவும் பிரபலமானது. ஆனால் தற்போது இந்த கீரிமை தயாரிக்கும் இந்துஸ்தான் லீவர் லிமிடெட் இந்திய பிரிவு விற்பனைக்கு அதன் பெயரை மாற்றிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Fair & lovely என்ற பெயரில் உள்ள Fair என்ற சொல் மட்டும் மாற்றப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. காரணம் இந்தச் சொல் நிறப் பாகுபாட்டை திணிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தனர். அதையடுத்து நிறப்பாகுபாட்டை எங்கள் நிறுவனம் ஆதரிக்க வில்லை என விளக்கும் விதத்தில் பெயர் மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த க்ரீமுக்கு புதிய பெயர் வைக்கப்படும் எனவும் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் எனவும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

More News

குழப்பத்தில் கொரோனா: வந்தது தங்கத்தினால் ஆன மாஸ்க்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை

இந்திய வரலாற்றில் இருண்ட நாள் இன்று ... மீளா கறுப்புக்குள் புகுந்துகொண்ட ஜுன் 25 பற்றி சில சுவாரசிய தகவல்கள்!!!!

இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட காலக் கட்டமாக எமெர்ஜென்சி நிலை அறியப் படுகிறது

ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பத்திற்கு மாறாக வெளியாகும் சுஷாந்த்சிங்கின் கடைசி படம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மறைவு பாலிவுட் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவர் நடித்து முடித்துள்ள கடைசி திரைப்படமான 'Dil Bechara' என்ற திரைப்படம் ஓடிடியில்

சீன பொருட்களை தெருவில் எறிந்து, தீயிட்டு கொளுத்திய தமிழ் இயக்குனர்!

சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்கள்

டெஸ்ட் போட்டிகளில் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்!!!

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடை பெறவில்லை.