close
Choose your channels

ரஜினிக்கு நண்பராகும் சிவகார்த்திகேயன் பட வில்லன்

Thursday, July 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங் பகுதியில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இந்த படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அவர் தான் பிரபல இயக்குனர் ஃபாசில் மகனும், சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தில் வில்லனாக நடித்தவருமான பகத் பாசில்

பகத் பாசில் இந்த படத்தில் ரஜினிக்கு நண்பராக நடிக்கவுள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் இந்த படத்தில் ரஜினியும் விஜய்சேதுபதியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் அதிகமாக இருப்பது மட்டுமின்றி அந்த காட்சிகள் மாஸ் ஆகவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மொத்தத்தில் ரஜினி, விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு இந்த படம் சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment