கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Saturday,July 24 2021]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டது என்றும், அதன் பின்னர் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இன்று முதல் ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கமல்ஹாசனும் பகத் பாசிலும் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர் என்று கூறப்படும் நிலையில் அவர்களும் விரைவில் படப்பிடிப்பில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை முடித்த பின்னர் கமல்ஹாசன் ’பாபநாசம் 2’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.