close
Choose your channels

'தளபதி 67' படத்தில் பகத் பாசில் இருக்கின்றாரா? அவரே கூறிய பதில் இதோ!

Monday, January 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களின் தகவல்கள் இதுவரை இல்லாத அளவில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கி,ன் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் மேலும் சில நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடித்த பகத் பாசில் ’தளபதி 67’ படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தளபதி 67’ படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பகத் பாசில், ‘லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என்ற அடிப்படையில் நானும் அந்த படத்தில் இருக்கலாம் என்று கூறினார். இதனை அடுத்து பகத் பாசில் ’தளபதி 67’ படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ’கைதி’ படத்தில் இடம்பெற்ற டெல்லி என்ற கேரக்டரும் ’தளபதி 67’ படத்தில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் தற்போது பகத் பாசிலும் இருக்கிறார் என்ற தகவல் இந்த படத்தை மிகப்பெரிய அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment