பகத் பாசிலுக்கு வந்த அபூர்வ நோய்.. 41 வயதில் குணமாக வாய்ப்பு இருக்கின்றதா?
- IndiaGlitz, [Tuesday,May 28 2024]
பிரபல நடிகர் பகத் பாசிலுக்கு அபூர்வ நோய் ஏற்பட்டுள்ள நிலையில் அவருடைய வயதுக்கு இந்த நோய் முழுமையாக குணமடையுமா என்று மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக நடிகராக இருந்து வரும் பகத் பாசில் தற்போது ’புஷ்பா 2’ ‘வேட்டையன்’ ’மாரிசன்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான ’ஆவேஷம்’ என்ற மலையாள திரைப்படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பகத் வாசலுக்கு திடீரென ஏ.டி.எச்.டி என்ற கவன குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு நோய் ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.டி.எச்.டி என்பது ஒரு மூளையின் நரம்புகளில் ஏற்படும் ஒரு மாற்றம் என்றும், இந்த நோயால் பாதிப்பு அடைந்தவர்கள் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது என்றும், எளிதில் திசை திரும்ப கூடிய தன்மை உடையவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது..
சிறு வயதில் இந்த நோயை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்றும் பகத் பாசிலுக்கு தற்போது 41 வயதில் கண்டறியப்பட்டதால் குணப்படுத்த முடியுமா என்று மருத்துவரிடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.