பகத் பாசில் - வடிவேலு படத்தின் மாஸ் டைட்டில்.. செம்ம போஸ்டர் வைரல்..!

  • IndiaGlitz, [Monday,January 22 2024]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கும் இந்த படம் சாலையில் பயணம் செய்யும் ஒரு காமெடி படம் என்றும் ஒரு இளைஞர் மற்றும் நடுத்தர வயதை சேர்ந்த இருவர் நாகர்கோவில் முதல் பொள்ளாச்சி வரை சாலையில் பயணம் செய்யும்போது ஏற்படும் அனுபவம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’மாரீசன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ளது. செம்மயாக இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு சல்யூட்.. விஷாலின் இந்த பதிவு எதற்கு?

இன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து பிரதமருக்கு ஒரு சல்யூட் என நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில்  பெருமையுடன் புகழ்ந்துள்ளார்.

ராமர் பெயரில் சமுத்திரக்கனியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. இணையத்தில் வைரல்..!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்றைய தினத்தில் சமுத்திரகனி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் 'ஸ்ரீ ராமரின் தெய்வீக ஆசீர்வாதத்துடன்'

ராமர் கோவில் திறக்கும் தினத்தில் நடிகை பார்வதியின் பதிவு.. ரியல் சூப்பர் ஸ்டார் என குவியும் கமெண்ட்ஸ்..!

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்றுள்ளனர். இந்த நிலையில் நடிகை பார்வதி 'நமது நாடு மதச்சார்பற்ற, சோசலிச,

ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்.. அயோத்தியில் ரஜினியை சந்தித்த பிரபலத்தின் பதிவு..!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர் அவரை சந்தித்த  புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து ஒன் அண்ட் ஒன்லி

ராமர்  கோவில்   திறப்பு விழா.. 'பாகுபலி 2' இடைவேளை காட்சி போல் உள்ளது: தமிழ் இயக்குனர் ட்வீட்..!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து ராமர் கோவில் திறப்பு விழா என்பது 'பாகுபலி 2' இடைவேளை காட்சி போல் பிரமாண்டமாக உள்ளது