ஒரே படத்தில் பகத் பாசில் மற்றும் எஸ்.ஜே.சூர்யா.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கடந்த சில ஆண்டுகளாக மல்டி ஸ்டார் திரைப்படங்கள் அதிக அளவில் உருவாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ’விக்ரம்’ ’ஜெயிலர்’ உட்பட பல மல்டி ஸ்டார் திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒரே படத்தில் பகத் பாசில் மற்றும் எஸ்ஜே சூர்யா இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூப்பர் ஹிட் பட இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் அவருக்கு பல படங்கள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படம் அவருடைய முதல் மலையாள படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை ’ஜெய ஜெய ஜெய ஹே’ என்ற படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரது இயக்கத்தில் உருவான ’ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 50 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும், ஓடிடியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

’ஜெய ஜெய ஜெய ஹே’ படத்திற்கு பின்னர் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்த படத்தை விபின் தாஸ் இயக்கியுள்ள நிலையில் அடுத்த படமாக தான் பகத் பாஸில் மற்றும் எஸ்ஜே சூர்யா இணையும் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

எஸ்ஜே சூர்யா, பகத் பாசில் ஆகிய இருவரும் நடிப்பு அரக்கன்கள் என்ற பெயரை பெற்றுள்ள நிலையில் இருவரும் ஒரே படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

'வேட்டையன்' இயக்குனரின் அடுத்த பட நாயகன் இவரா? வேற லெவல் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தை இயக்கி வரும் ஞானவேல் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ZEE5 இல் விஸ்வக் சென்னின் 'காமி' திரைப்படம்.. உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டம்..!

உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டமாக, ஏப்ரல் 12 முதல், நடிகர் விஸ்வக் சென்னின் "காமி" திரைப்படம்,  தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல்  திரையிடப்படுகிறது!

ஜோதிகாவுக்கும் வந்ததா இரண்டாம் பாக ஆசை? முதல் பாக இயக்குனருக்கு அட்வான்ஸ்..!

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் ரஜினி, கமல் உட்பட பல பிரபலங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும்

ரிலீசாகி இரண்டே வாரத்தில் ஓடிடிக்கு வந்த ஜிவி பிரகாஷ் படம்.. ரூல்ஸ் எல்லாம் அவ்வளவுதானா?

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இன்று திடீரென ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளதை

ஒரே நாளில் 2 பட பூஜை போட்ட தயாரிப்பாளர்.. ஒன்று 2ஆம் பாகம்.. இன்னொன்று 4ஆம் பாகம்..!

பிரபல தயாரிப்பாளர் நேற்று ஒரே நாளில் இரண்டு படங்களையும் பூஜையை போட்டுள்ள நிலையில் அதில் ஒரு படம் அவர் தயாரித்த படத்தின் 2ஆம் பாகம் என்றும் இன்னொரு படம் அவர் தயாரித்த படத்தின் 4ஆம் பாகம்