பகத் பாசில் -நஸ்ரியாவின் 'நிலை மறந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல மலையாள நடிகரான பகத் பாசில் கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’, கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பகத் பாசில் மற்றும் அவருடைய மனைவி நஸ்ரியா இணைந்து நடித்த மலையாள திரைப்படமான ’ட்ரான்ஸ்’ என்ற திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ’நிலை மறந்தவன்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் ’விக்ரம்’ படத்தில் நடித்த செம்பான் வினோத், 'திமிரு’ படத்தில் நடித்த விநாயகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ’உஸ்தாத் ஹோட்டல்’ என்ற படத்தை இயக்கியவரும் ’பிரேமம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவருமான இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமந்தாவின் நாய்க்கு நன்றி சொன்ன நாக சைதன்யா!

சமந்தாவை விவாகரத்து செய்வதாக நாகசைதன்யா அறிவித்த போதிலும் சமந்தாவை இன்னும் மறக்க முடியாமல் நாகசைதன்யா தவித்து வருவதாக அவர் தனது டுவிட்டரில் மறைமுகமாக கூறியுள்ளதாக சமூக வலை த

'தி லெஜண்ட்' திரைப்படத்தை உலக அளவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

சரவணா ஸ்டோர் அதிபர் அருள் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள நிலையில் இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது 

சமூக சேவைக்காக ‘டாக்டர்’ பட்டம் பெற்ற தமிழ் திரையுலக பிரபலம்: குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் திரை உலகில் சாதனை செய்ததற்காக டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே

நீங்கள் குழந்தை பெற்று கொள்ள வேண்டாம்: பிரபல நடிகரின் மனைவிக்கு அறிவுரை கூறிய சத்குரு

 நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்ற முடிவை எடுத்தால் நான் உங்களுக்கு விருது கொடுப்பேன் என்றும் குழந்தை பெற்றுக் கொள்ள தகுதி இருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவை

ராமராஜன் படத்தில் அறிமுகமான நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன்களா?

நடிகர் ராமராஜன் படத்தில் அறிமுகமாகி அதன் பின் பிரபல நடிகையாக இருந்த  ஒருவரின் மகன்களின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இந்த நடிகைக்கு இவ்ளோ பெரிய மகன்களா?