நடிகருக்கு ரூ.2 கோடி மதிப்பு காரா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த இளம் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கினார்கள். போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற நவீன இந்த காரின் மதிப்பு சுமார் 2 கோடி என்பதும் இந்த கார் மணிக்கு முன்னூறு கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய வகையில் உள்ளது என்பதும் சமீபத்தில் இந்த காருடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பகத் பாசில் நஸ்ரியா ஜோடிக்கு பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் அதே சமயம் எப்போதும் குற்றம் சொல்லும் வழக்கம் உடைய ஒரு சில நெட்டிசன்கள் இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்குவதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவி இருக்கலாம் என்று வழக்கம்போல் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் கருத்தை கூறியுள்ளனர்.
இவ்வாறு கருத்து கூறிய சிலருக்கு மலையாள இளம் நடிகை அஹானா கிருஷ்ணா பதிலடி கொடுத்துள்ளார். பொறாமையை கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்துபவர்கள் தான் இந்த மாதிரி விஷத்தை கக்குகின்றனர் என்றும் இதுபோன்ற நபர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் பொறாமை தவிர வேறு ஒன்றும் அவர்களுக்கு இல்லை என்றும் மற்றவர்கள் முன்னேற்ற முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைய கற்றுக் கொள்ளுங்கள் என்றும் இல்லாவிட்டால் வாயை மூடிக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments