கொரோனாவை ஒருசில வினாடிகளில் கண்டறியும் ஃபேஷியல் ஸ்கேனர், மாஸ்க்… அசத்தும் புது வரவு!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று இன்றுவரை உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சில நாடுகளில் தற்போது 3 ஆம் அலைக்கான அறிகுறி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த நெருக்கடியான நிலைமையிலும் மக்கள் தறபோது இயல்பான வாழ்க்கையை வாழத்துவங்கி விட்டனர்.

இதனால் கோவிட் டெஸ்ட் முறையை இன்னும் துரிதமாக, அதுவும் துல்லியமாக எடுக்க வேண்டும், மேலும் பெரும்பாலான மக்களின் கைகளில் கிடைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அபுதாபி அரசாங்கம் அறிமுகம் செய்து ஃபேஷ் ஸ்கேனர் பரிசோதனை முறை ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பதை ஒரு சில வினாடிகளில் சொல்லிவிடுகிறது.

அபுதாபியில் உள்ள இ.டி.இ ரிசர்ச் சென்டர் உருவாக்கிய இந்த ஃபேஷியல் ஸ்கேனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனால் யாஸ் தீவு, முசாபா போன்ற தீவுகளில் உள்ள பல்வேறு இடங்களில் இந்த ஃபேஷ்ஸ்கேனர் பரிசோதனை முறை தற்போது பயன்பாட்டில் உள்ளது.

மேலும் மின்காந்த அலைகள் மூலம் செயல்படும் இந்த ஸ்கேனர் முறை 90% துல்லியமான ரிசல்டை கொடுப்பதாகவும் இதுவரை 20 ஆயிரம் பேரிடம் இது பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன்களில் ஒரு அப்ளிகேஷ்னை கொண்டு பயன்படுத்தப்படும் இந்த ஃபேஷ்ஸ்கேனர் முறையில் கொரோனா வைரஸின் புரதப் பொருளான ஆர்.என்.ஏ இருக்கிறதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும்.

மேலும் இந்தப் பரிசோதனையில் சிவப்பு லைட் எரிந்து பாசிடிவ் ரிசல்ட் வந்துவிட்டால் உடனே ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை செய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத்தவிர ஹார்வர்ட் பல்கலைக்கழக உருவாக்கியுள்ள பிரத்யேகமான மாஸ்க் ஒன்றில் சுவாசத்தை கொண்டே ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஸ்மார்ட் போனுடன் இணைந்து செயல்படும் இந்த மாஸ்க்கில் ஒரு பட்டன் இருக்குமாம். அந்தப் பட்டனை அழுத்திய உடனேயே அணிந்து இருக்கும் நபரின் சுவாசத்தை அது அளவிடத் துவங்கிவிடும். இதனால் வெறும் 90 நிமிடங்களில் கொரோனா ரிசல்டை ஸ்மார்ட்போனுக்கு அனுப்பி விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இந்த மாஸ்க் கொடுக்கும் கொரோனா முடிவு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முடிவைப் போலவே துல்லியமாக இருக்கும் என்றும் இது பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் மலிவான விலையில் உருவாக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

More News

இந்த குட்டி பாப்பாக்களில் மஞ்சிமா மோகன் யார்? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பின்னர் அவர் 'சத்ரியன்' 'இப்படை வெல்லும்' 'தேவராட்டம்'

பப்ஜி காஸ்ட்யூமில் இருக்கும் இந்த தமிழ் நடிகர் யார்?

பப்ஜி காஸ்ட்யூமில் பிரபல நடிகர் ஒருவர் போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

கிருத்திகா உதயநிதி படத்தில் இணைந்த 4 பிரபலங்கள்: யார் யார் தெரியுமா?

வணக்கம் சென்னை, காளி ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்ததாக ஓடிடி பிளாட்பாரத்திற்கு ஆக ஒரு வெப்திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் அதிகாரபூர்வ

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்: தயாரிப்பாளர் யார் தெரியும?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ரசிகர்களுடன் சூப்பர் ஸ்டார்: அட்டகாசமான புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றார் என்பதும் அங்கு அவர் சில நாட்கள் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் சென்னை திரும்புவார்