அதிபர் ட்ரம்ப்பின் பதிவை அதிரடியாக நீக்கிய பேஸ்புக், டிவிட்டர்!!! காரணம் என்ன தெரியுமா???

 

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனமான ஃபாக்ஸ் நியூஸ்க்கு தொலைபேசி வாயிலாக ஒரு பேட்டியை அளித்து இருக்கிறார். அந்த பேட்டியை தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்திலும் அதிபர் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவைத்தான் தற்போது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்கள் “கொரோனா குறித்து தவறான தகவலை பதிவிடுவது தங்களது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது” எனக்கூறி அதிரடியாக நீக்கியிருக்கிறது.

அதிபர் தனது நேர்காணலில் குழந்தைகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கிறார்கள். அவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கலாம். அவர்களுக்கு எளிதாக நோய்த்தொற்று ஏற்படாது. மேலும் வீட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் நோய்த்தொற்றை குழந்தைகள் பரப்பமாட்டார்கள் எனத் தெரிவித்து இருந்தார். இந்த கருத்துகள் கொரோனா விஷயத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தும் எனவும் உண்மைக்கு புறம்பான கருத்து எனவும் பலர் விமர்சித்த நிலையில் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அதிரடியாக பதிவினை நீக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.