உங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

ஃபேஸ்புக்கில் புதிதாக நான்கு அம்சங்கள் இணைக்கப்பட்டு, பிரைவஸி அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக், இன்று உலகில் சுமார் 2.45 பில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இதில், 2014ல் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கான பிரைவஸி அமைப்புகள் (Privacy Checkup tool) அறிமுகப்படுத்தப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்திய வெர்ஷன் தற்போதுவெளியிடப்பட்டுள்ளது.

இதில், நீங்கள் பதிவிடுவதை யார் பார்க்க முடியும்?(Who can see your post?) என்கிற விருப்பத்தேர்வின் மூலம், உங்கள் கணக்கில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற சுய விவர தகவல்கள் மற்றும் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை யார் பார்க்க முடியும் என்பதைப் பயன்பட்டாளர்கள் இன்னும் தெளிவாகப் பார்க்கவும் மாற்றவும் முடியும்.

உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?(How to Keep Your Account Secure) என்ற அம்சத்தின்மூலம் வலுவான கடவுச்சொல் அமைக்கவும், புது சாதனங்களிருந்து உள்நுழையும்போது எச்சரிக்கை பெறவும் முடியும்.மக்கள், உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்(How People Can Find You) என்ற அம்சத்தின் மூலம், முகநூலில் மக்கள் உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்றும், உங்களுக்கு யார் ரெக்வஸ்ட் அனுப்பமுடியும் என்பதையும் புதிய அப்டேட்டில் பயன்பாட்டாளர்களால் மாற்றியமைக்க முடியும்.

மேலும், ஃபேஸ்புக்கில் உள்ள தரவு அமைப்புகள் (Data Settings), ஃபேஸ்புக் இணைக்கப்பட்டுள்ள செயலிகளிலிருந்து பகிரப்படுகிற பதிவுகளை நிர்வகிக்க உதவுவதுடன், இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படாத செயலிகளை அகற்றவும் பயன்படும் என ஃபேஸ்புக் கூறியுள்ளது.

More News

இந்தியாவை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கின்றது: பிரபல நடிகை

இந்தியாவை நினைத்தால் தனக்கு பயமாக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

ஏகப்பட்ட மனைவிகள்: 10க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகள்: ஒரு மாற்றுத்திறனாளியின் பகீர் வாக்குமூலம்!

பார்வையில்லாத மாற்றுத் திறனாளி ஒருவர் பல பெண்களை திருமணம் செய்தும் பத்துக்கும் மேற்பட்ட  கள்ளக்காதலிகளிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளதும் அவரது வாக்குமூலத்தின் தெரியவந்துள்ளதால்

'தர்பார்' வெற்றி பெற நூதன வேண்டுதல்களை நிறைவேற்றிய ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் படத்தை வரவேற்க காத்திருக்கின்றனர் 

விஜய்க்கு நான் தான் உதவி செய்தேன்: மைக் மோகன்

கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் ஆக இருந்தவர் நடிகர் மைக் மோகன்.

EMI கடன் வசதியினால் ஏற்படும் பாதிப்புகள்

தனிநபரிடம் கடன் வாங்கும்பொழுதோ அல்லது வங்கியில் கடன் வாங்கும் பொழுதோ அதன் வட்டி விகிதத்தை ஒரு முறைக்குப் பல முறை ஆலோசித்துச் செயல்படுகிறோம்.