இளம் ரசிகையின் கையை விஜய் பிடித்தது ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,May 09 2018]

சமீபத்தில் சென்னையில் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தபோது கேரளாவை சேர்ந்த ஏராளமான விஜய் ரசிகர்கள் அவரை பார்க்க வருகை தந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சரண்யா விசாக். இந்த சந்திப்புக்கு பின்னர் இவர் தன்னுடைய முகநூலில் விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் விஜய், அந்த பெண்ணின் கையை பிடித்திருந்தது போல் இருந்தது

இந்த புகைப்படம் குறித்து ஒருசிலர் விமர்சித்து வந்த நிலையில் சரண்யா விசாக் தன்னுடைய முகநூலில் செய்திருந்த பதிவு இதற்கு விடையாக அமைந்தது. அவர் தன்னுடைய முகநூலில் கூறியதாவது: 

விஜய் அண்ணாவின் முகம் என் மனதில் பதிந்துள்ளது. அவரை பார்க்கவோ, பேசவோ முடியாது என்று நினைத்தேன். எனக்கு எல்லோரையும் விட விஜய் அண்ணனை தான் மிகவும் பிடிக்கும். விஜய் அண்ணா மீது நான் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பலரும் என்னை கிண்டல் செய்தது உண்டு. நான் விஜய் அண்ணாவை பார்க்கவே முடியாது என்றார்கள். இதோ பார்த்துவிட்டேன். அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் உறைந்துவிட்டேன். பின்னர் உங்கள் கையை தொடலாமா என்று கேட்டேன். அவரும் சிரித்தபடியே கை கொடுத்தார், கேமராவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார். அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூற ரொம்ப நன்றிமா கண்டிப்பா சாப்பிட்டுப் போங்க என்றார். என் கனவு நிறைவேறிவிட்டதே என அவர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவு விஜய்யை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியாக அமைந்தது.