நேற்று பிறந்த குழந்தைக்கு இன்று கடிதம் எழுதிய ஃபேஸ்புக் மார்க்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அவர்களை தெரியாத இளையதலைமுறையினர் இருக்க முடியாது. உலக அளவில் நம்பர் ஒன் சமூக இணையதளத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமை உலகம் உள்ளவரை அவருக்கு இருக்கும்.
முன்பெல்லாம் குழந்தை பிறந்தால் கடிதம் மூலமாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்போம். ஆனால் தற்போது ஃபேஸ்புக் மூலம் தான் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம். இதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் அவர்களும் விதிவிலக்கல்ல
இந்த நிலையில் மார்க்-பிரிசில்லா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த மார்க், நேற்று பிறந்த மகளுக்கு கடிதம் ஒன்றையும் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த உலகிற்கு உன்னை வரவேற்கிறேன். வளர்ந்த பிறகு நீ என்னவாக ஆவாய் என்பதை தெரிந்துகொள்ள நானும் உனது அம்மாவும் மிகவும் ஆர்வமாக உள்ளோம். உனது அக்கா பிறந்த போது, இந்த உலகம் குறித்து ஒரு கடிதம் எழுதினோம். இந்த சமத்துவமான உலகில் வலிமையான சமூகத்தில் அவளும், இப்பொழுது நீயும் நல்ல கல்வியுடனும் நல்ல உடல்நலத்துடனும் வளர வேண்டும்.
இதை நாங்கள் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தை மனதில் வைத்துக் கூறுகிறோம். ஆனால், அதைச் செய்வதில் எங்களின் பங்களிப்பு நிறையவே உள்ளது. உங்களின் வளர்ந்த பருவத்தைப் பற்றி பேசுவதை விட உங்களின் குழந்தை பருவத்தைப் பற்றி பேசவே விரும்புகிறோம். இந்த உலகம் ரொம்ப சீரியஸ் ஆன இடம். அதனால், வெளியே சென்று விளையாடுவது மிக முக்கியம். குழந்தை பருவம் என்பது அழகானது. தவிர அது ஒரு முறைதான் நம் வாழ்வில் நடக்கும். அதனால் எதிர்காலம் குறித்த கவலைகளின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் "
இவ்வாறு மார்க் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும் மார்க்-பிரிசில்லா தம்பதியினர் தங்களது இளைய மகளுக்கு 'ஆகஸ்ட்' என்று பெயர் வைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments