பேஸ்புக் பழக்கத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்: கர்ப்பமானதும் கைவிட்டு போன கணவர்!
- IndiaGlitz, [Monday,August 17 2020]
ஃபேஸ்புக் பழக்கத்தில் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் கர்ப்பமானதும் தனது கணவர் தன்னை விட்டு போனதால் தற்போது பெரும் சிக்கலில் உள்ளார்
மதுரை விஸ்வநாதபுரம் என்ற பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அவருக்கும் மேலூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதையடுத்து இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர்
இந்த நிலையில் சத்யா கர்ப்பமானார். இதனை அடுத்து அவரது கணவர் உதயகுமாரை திடீரென அவரது தந்தை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது தந்தையுடன் சென்று தாயைப் பார்த்து விட்டு மீண்டும் 4 நாட்களில் திரும்பி வருவதாக உதயகுமார் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்
ஆனால் தாயைப் பார்க்கச் சென்ற உதயகுமார் திரும்பி வரவே இல்லை. இதனை அடுத்து சத்யா கணவரின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டபோது உதயகுமாரின் தந்தை அவரை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் 30 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறியதாகவும் தெரிகிறது
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சத்யா, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்ததால் பெற்றோரிடமும் உதவி கேட்க முடியாமல், கர்ப்பமான நிலையில் உள்ள தன்னை கட்டிய கணவனும் கைவிட்டதால் தற்போது மீண்டும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் அளித்துள்ளார்
பேஸ்புக் காதலால் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த இளம்பெண்ணின் நிலைமை தற்போது பரிதாபமான உள்ளதை அறிந்து அந்த பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்