முயற்சியை கைவிடாதீங்க… 35 முறை தோல்வியை சந்தித்த இளைஞர் ஐஏஎஸ் ஆன சுவாரசியம்!!
- IndiaGlitz, [Thursday,August 03 2023]
போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது என்பது அவ்வளவு எளிதான கரியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் விடாமுயற்சியை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவர் 35 முறை தேர்வில் தோல்வியைச் சந்தித்து இறுதியில் இந்திய ஆட்சி பணியாளராக வலம் வரும் தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் நம்மில் பலர் ஒரிரு முறை முயற்சித்து பார்த்து விட்டு நமக்கு சரிப்பட்டு வருமா? என்ற கேள்வியை ஒருமுறை கேட்டுக் கொள்வதுண்டு. இதில் பெரும்பாலான மக்கள் நம்மால் முடியாது என்று விலகி விடுகின்றனர். இதுபோன்ற கேள்விகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு யார் விடாமுயற்சியுடன் முன்னேறுகிறாரோ? அவர்தான் இறுதியில் வெற்றியைச் சுவைக்க முடியும். இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.
அதிலும் இந்த விடாமுயற்சிக்கு ஒரு எல்லையே இல்லையா? என்ற கேள்வி எழலாம். அப்படித்தான் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் வர்தன் என்ற இளைஞர் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து 35 போட்டித் தேர்வுகளில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ளார்.
ஆனாலும் சிர்சா பகுதியில் வசித்துவந்த அந்த இளைஞர் ஐஏஎஸ் ஆகியே தீர வேண்டும் என்ற முனைப்புடன் டெல்லி சென்றுள்ளார். அங்கு சென்று தங்கிப் படடித்துவந்த அந்த இளைஞர் கடந்த 2018 யுபிஎஸ்சி தேர்வில் 104 ஆவது இடத்தைப் பிடித்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் முதல் முறையாக போட்டித் தேர்வில் வெற்றிப்பெற்று ஐபிஎஸ் ஆனாலும் தன்னுடைய கனவை நோக்கி மீண்டும் பயணித்த அந்த இளைஞர் ஒருவழியாக கடந்த 2021 இல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
இப்படி 35 முறை போட்டித் தேர்வுகளில் தோல்வியை மட்டுமே பார்த்துவந்த அந்த இளைஞர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான பிறகும் தன்னுடைய கனவுக்காக விடாமுயற்சியுடன் ஓடி இறுதியில் இந்திய ஆட்சிப் பணியாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் தகவல் உத்வேகத்துடன் உழைத்துவரும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்துவருகிறது. மேலும்