விவசாயியாக இருப்பதால் பெருமிதம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
விவசாயிகளின் கடின உழைப்பை போற்றும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 23 ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடாக விளங்குகிறது. அந்த வகையில் மேலும் இந்தத் தினம் சிறப்பு பொருந்தியதாகவே கருதப்படுகிறது. இந்நாளில் விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும் எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொண்டு வரப்பட்ட விவசாயச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக 28 ஆவது நாளாகத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாயிகள் தினம் இன்று சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையிலும் பல தலைவர்கள் விவாசாயிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உலகின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் செய்து வரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த தேசிய விவசாய தின நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உலகிற்கே படியளக்கும் விவசாயியாக நான் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இவரது பதிவிற்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
"உழந்தும் உழவே தலை"
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 23, 2020
உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த "தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை" அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். #farmersday pic.twitter.com/rTNdlpMOwm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments