மின் கட்டண செலுத்த கால நீட்டிப்பு...! தமிழக அரசு அதிரடி உத்தரவு.....!

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், தொற்றின் 2-ஆம் அலை அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கோவிட் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் மே-24-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பேட்டில் கூறியிருப்பதாவது,
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால், மக்களுக்கு மின் கட்டணத்தை செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான இறுதித் தேதி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை நேரில் செலுத்துவதை காட்டிலும், ஆன்லைனில் செலுத்துங்கள் என்று மின்சார வாரியம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

More News

கொரோனா  நிவாரணம் எப்பொழுது வழங்கப்படும்....? கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு...!

கொரோனா நிவாரண நிதி வரும் மே-15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புது கிரிக்கெட் அணியா? ஷிகர் தவான் கேப்டனா?

இந்தியாவில் இளம் வீரர்களைக் கொண்ட புது கிரிக்கெட் அணி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை… மீண்டும் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த அவலம்!

டெல்லி, செங்கல்பட்டு, மும்பை, கர்நாடகா எனத் தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

'தளபதி 65' படத்தின் செட் போடும் பணியை நிறுத்த சொன்ன விஜய்: என்ன காரணம்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

விஜய்யுடன் டான்ஸ் ஆடும்போது கர்ப்பமாக இருந்தேன்: பிரபல நடிகை பேட்டி

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் போது தான் இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளார்