மின் கட்டண செலுத்த கால நீட்டிப்பு...! தமிழக அரசு அதிரடி உத்தரவு.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், தொற்றின் 2-ஆம் அலை அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கோவிட் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் மே-24-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பேட்டில் கூறியிருப்பதாவது,
"ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால், மக்களுக்கு மின் கட்டணத்தை செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான இறுதித் தேதி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை நேரில் செலுத்துவதை காட்டிலும், ஆன்லைனில் செலுத்துங்கள் என்று மின்சார வாரியம் சார்பாக கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout