பிரபல பாடகர் கொல்லப் பட்டதற்காக வெடித்த போராட்டம்!!! வன்முறையாக மாறியதால் நடந்த கொடூரம்!!!
- IndiaGlitz, [Thursday,July 09 2020]
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தோப்பியாவில் ஒரு பிரபல பாடகர் மர்ம நபர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த விவாரகம் தற்போது அந்நாட்டில் பூதாகரமாக மாறியிருக்கிறது. உயிரிழந்த பாடகர் ஹஹலூ ஹான்டிசா கடந்த மாதம் 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சுட்டதால் உயிரிழந்தார். அந்த கொலையில் உள்நோக்கம் இருப்பதாகவும் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
பாடகர் ஒரோமியா என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர். எனவே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரோமியா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது போராட்டங்கள் வெடித்து இருக்கிறது. இந்தப் போராட்டங்கள் 10 நாட்களாக மிகவும் தீவிரமாகி இருக்கிறது. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் மாறியிருக்கிறது. பல இடங்களில் கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொழுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போராட்டங்கள் ஒருவாரத்திற்கு மேலாக நீடித்து வருவதால் நாடு முழுவதும் பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது. நடக்கும் போராட்டங்களை கலைக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபடுவதால் பல நேரங்களில் வாக்குவாதம் முற்றுகிறது. இதுவரை நடைபெற்ற வன்முறையில் 239 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அம்மாகாணத்தின் காவல் துறை தகவல் தெரிவித்து உள்ளது. போராட்டங்கள் முற்றுப் பெறாத நிலையில் இன்னும் உயிரிழப்புகள் அதிகமாகும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.