போலீஸ் அதிகாரிகள் யாருக்கெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும்?

  • IndiaGlitz, [Friday,September 17 2021]

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை நேற்று பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும் நடிகருமான சுரேஷ் கோபி பார்வையிட்டார். அப்போது போலீஸ் ஜீப்பில் அமர்ந்திருந்த எஸ்.ஐ ஒருவர் எம்.பி சுரேஷ் கோபியை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து “நான் ஒன்றும் மேயரல்ல. எம்.பி. சல்யூட் வையுங்கள்“ எனக் கூறிய வீடியோ சேனல்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த எம்.பி சுரேஷ் கோபி நான் அந்த போலீஸ் அதிகாரியை பார்த்து, “சார்“ என்றுதான் அழைத்தேன். மேலும் “நான் ஒரு எம்.பி. ஒரு சல்யூட் வைக்கலாமே“ என்று மென்மையாகத்தான் கேட்டேன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் யாருக்கெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும்? எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு சல்யூட் வைக்க வேண்டுமா? என்பது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு கேரள போலீஸ் உயரதிகாரிகள் அளித்த விளக்கத்தில் சட்டப்பூர்வமாக தகுதி வாய்ந்தவர்களுக்கு சல்யூட் வைப்பது போலீஸின் வழக்கம். எம்.பி, எம்.எல்.ஏக்கள் அந்த பட்டியலின் கீழ் வரமாட்டார்கள். என்றாலும் ஒரு மரியாதை அடிப்படையில் அவர்களுக்கு போலீசார் வணக்கம் செலுத்துவது வழக்கம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இதேபோல கடந்த ஜுலையில் திருச்சூர் மாநகராட்சி மேயர் எம்.கே.வர்க்கீஸ் தங்களுக்கும் போலீஸ் அதிகாரிகள் சல்யூட் வைக்க வேண்டும் என்று மாநில டிஜிபி இடம் கோரிக்கை வைத்தாராம். தற்போது இந்த சர்ச்சையில் பாஜக எம்.பி சுரேஷ் கோபி சிக்கியுள்ளார். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்களில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் குடியரசு தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், கேபினட் அமைச்சர்கள், நீதிபதிகள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களுக்கு போலீஸார் கட்டாயமாக சல்யூட் வைக்க வேண்டும் என்று விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.

போலீஸார் காவல்துறையில் தங்களுடைய உயரதிகாரிகளுக்கு சல்யூட் வைத்து மரியாதை செலுத்த வேண்டும். மாவட்ட எஸ்பி- டிஐஜிக்கும், டிஐஜி- ஐஜிக்கும், ஐஜி- ஏடிஜிபிக்கும், ஏடிஜிபி- டிஜிபிக்கும் சல்யூட் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விதிகளில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால் சாலைகளில் போக்குவரத்து பணிகளில் இருக்கும் இருக்கும் காவலர்கள் யாருக்கும் சல்யூட் வைக்க தேவையில்லை என்றும் விதிகளில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மாநிலங்களவை எம்.பிக்கள், மக்களை எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போலீஸார் சல்யூட் வைக்க வேண்டும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை.

More News

திருமண வீட்டிற்கு சென்ற நடிகர் விமலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விமல் சென்றபோது அவருடைய விலையுயர்ந்த செல்போன் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வித்தியாசமான டாஸ்க், எலிமினேஷனுக்கு புது ரூல்ஸ்: அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக எனக் கருதப்படும் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவல் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாகவும்

இனிமேல் கிசுகிசு பேச முடியாது: பிக்பாஸ் புதிய புரமோ வீடியோ

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிமைப்படுத்தும் காலம் தொடங்கி விட்டதாக

சூப்பர் சிங்கரில் இருந்து விலகிய ப்ரியங்கா: பிக்பாஸ் கன்பர்மா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும் இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினார்கள் என்பது தெரிந்ததே

ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகை பிரியங்கா சோப்ரா… என்ன காரணம்?

“தி ஆக்டிவிஸ்ட்“ எனும் ரியால்டி ஷோவில் கலந்து கொண்டதற்காக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா