தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜுன் 7 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீடிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்து இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு விதிமுறைகள் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஊரடங்கு நாட்களில் மதியம் 12 மணி வரை அத்யாவசியக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் எகிறத் தொடங்கியது. இதனால் மே 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கொரோனா நோய்ப்பரவல் சற்று தணிந்தது. ஆனால் முழுவதுமாக கொரோனா நோய் குறைய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு ஜுன் 7 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கும் முடிவடையும் நிலையில் ஊரடங்கு விதிமுறைகளைத் தளர்த்துவது குறித்த சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவ வல்லுநர் குழு தமிழகத்தில் சில பகுதிகளில் கொரோனா நோய்ப் பரவல் அதிகமாக உள்ளது. எனவே மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிக்கலாம் எனப் பரிந்துரைத்தனர். இதையடுத்து கொரோனா பரவல் அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு விதிமுறைகள் தொடரும் என்றும் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் சில விதிமுறைகளில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

More News

இலவச உணவை அடுத்து 'குக் வித் கோமாளி' தர்ஷாவின் அடுத்த சமூக சேவை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள் வேற லெவலில் பிரபலம் அடைந்தார்கள் என்பது தெரிந்தது.

வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று… அதிர்ச்சித் தகவல்!

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சகோதரரா இவர்? குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி என்பதும் 'பாகுபலி' உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பொதுநலன் வழக்கு தாக்கல் செய்த ரஜினி பட  நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம்!

பொதுநல வழக்கு தொடர்ந்த பிரபல நடிகைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சசிகலா அதிமுகவில் இல்லை… விளக்கம் அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.