கொரோனா தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல், கையில் வலி ஏன் வருகிறது?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிலருக்கு காய்ச்சல், தலைவலி, சிறிய மயக்கம், கூடவே கைகளில் வலி இருப்பதாகக் கூறுகின்றனர். அதிலும் சிலருக்கு ஊசி போட்ட இடத்தில் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருந்ததாகவும் பின்னர் பெரிதாக வீக்கத்துடன் கையைத் தூக்க முடியாத அளவிற்கு வலி ஏற்படுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸின் பிரதிபலிப்புதான் கொரோனா தடுப்பூசி என்றும் இந்த வைரஸ் நேரடியாக intramuscular injections எனும் முறையில் தசைகளில் செலுத்தப்படுகிறது. இதனால் தடுப்பூசி மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் செயலாற்றுகிறது. இப்படி செயலாற்றும்போது நமது உடலை நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க நமது நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாகப் போராடும்.
இந்த போராட்டத்தின் எதிர்விளைவுகளால் சிலருக்கு காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, உடல் வலி, குமட்டல், சோர்வு அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்றும் இந்த அறிகுறிகள் இருக்கும்போது கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்த அறிகுறிகளைப் பற்றி பயப்படத் தேவையில்லை என்றும் அரிதாக தடுப்பூசி போட்ட இடத்தில் சிவத்தல், பெரிய அளவில் வீக்கம் இருந்தால் மட்டுமே மருத்துவர்களை அணுகுமாறும் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் தடுப்பூசி போட்ட இடத்தில் ஏற்படும் வலியைப் பற்றி சிலர் கவலைப் படுகின்றனர். இதுகுறித்து பதில் அளிக்கும் மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்திய பிறகு 2 நாட்களுக்கு வலி இருந்தால் அதுகுறித்துப் பயப்பட தேவையில்லை என்றே கூறுகின்றனர். இதற்கு எளிய தீர்வாக ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம் என்றும் அறிவுரை கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments