கொரோனா தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல், கையில் வலி ஏன் வருகிறது?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிலருக்கு காய்ச்சல், தலைவலி, சிறிய மயக்கம், கூடவே கைகளில் வலி இருப்பதாகக் கூறுகின்றனர். அதிலும் சிலருக்கு ஊசி போட்ட இடத்தில் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருந்ததாகவும் பின்னர் பெரிதாக வீக்கத்துடன் கையைத் தூக்க முடியாத அளவிற்கு வலி ஏற்படுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸின் பிரதிபலிப்புதான் கொரோனா தடுப்பூசி என்றும் இந்த வைரஸ் நேரடியாக intramuscular injections எனும் முறையில் தசைகளில் செலுத்தப்படுகிறது. இதனால் தடுப்பூசி மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் செயலாற்றுகிறது. இப்படி செயலாற்றும்போது நமது உடலை நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க நமது நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாகப் போராடும்.

இந்த போராட்டத்தின் எதிர்விளைவுகளால் சிலருக்கு காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, உடல் வலி, குமட்டல், சோர்வு அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்றும் இந்த அறிகுறிகள் இருக்கும்போது கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்த அறிகுறிகளைப் பற்றி பயப்படத் தேவையில்லை என்றும் அரிதாக தடுப்பூசி போட்ட இடத்தில் சிவத்தல், பெரிய அளவில் வீக்கம் இருந்தால் மட்டுமே மருத்துவர்களை அணுகுமாறும் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் தடுப்பூசி போட்ட இடத்தில் ஏற்படும் வலியைப் பற்றி சிலர் கவலைப் படுகின்றனர். இதுகுறித்து பதில் அளிக்கும் மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்திய பிறகு 2 நாட்களுக்கு வலி இருந்தால் அதுகுறித்துப் பயப்பட தேவையில்லை என்றே கூறுகின்றனர். இதற்கு எளிய தீர்வாக ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம் என்றும் அறிவுரை கூறுகின்றனர்.

More News

பிஞ்சு குழந்தையுடன் ஐஸ்கிரீம் விற்றப்பெண், அதே பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான வெற்றிக்கதை!

கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் 6 மாத பிஞ்சு குழந்தையுடன் ஐஸ்கிரீம் விற்ற இளம்பெண் தற்போது

'பொன்னியின்' செல்வன் நடனம் குறித்து பிருந்தா மாஸ்டர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வரும் பிருந்தா, இந்த படத்திற்கு நடன இயக்குனராக பணிபுரிந்த

விஜய், அஜித்திடம் கேட்க வேண்டிய கேள்விகள்: கலா, பிருந்தா மாஸ்டர்கள்!

விஜய் அஜித் உள்பட தமிழ் திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து அவர்களிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று நம்முடைய பிரத்யேக பேட்டியில் டான்ஸ் மாஸ்டர்கள் கலா மற்றும் ஆகியோர் இணைந்து கூறியதாவது:

ஒரே ஷாட்டில் டான்ஸ் ஆடும் நடிகர், டான்ஸே வராத நடிகர்: கலா, பிருந்தா மாஸ்டர்கள்!

டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் பிருந்தா ஆகியோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் எவ்வளவு கஷ்டமான மூவ்மெண்ட் ஆக இருந்தாலும், ஒரே ஷாட்டில் ஆடும் அளவுக்கு திறமை உள்ளவர்

ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டங்கள்: கலா மாஸ்டரின் நெகிழ்ச்சியான பேட்டி!

பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் கலா மற்றும் பிருந்தா ஆகியோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஆரம்ப காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து கூறினார்கள்.