திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பிபி சரண் அவர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன் எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நான்காவது நாளாக சீராக உள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் அதாவது திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். அந்த நல்ல செய்தி கொரோனா வைரஸ் நெகட்டிவ் ரிசல்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிபி சரண் அவர்களின் இந்த புதிய வீடியோவால் எஸ்பிபி விரைவில் குணமடைந்து விடுவார் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
 

More News

சூர்யாதேவியை அடுத்து எலிசபெத் ஹெலனும் போட்டியாளரா? களைகட்டும் பிக்பாஸ் 4!

நடிகை வனிதா, பீட்டர்பால் என்பவரைத் திருமணம் செய்ததாக கூறப்படும் விவகாரம் கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகை ஒருவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு- பதற வைக்கும் மத்திய அரசின் சுற்றறிக்கை!!!

50-55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியர்கள் அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு

நான் சுங்கக்கட்டணம் தரமாட்டேன்- நடுரோட்டில் நிர்வாணப்  போராட்டம் நடத்திய சாமியார்!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சுங்கச்சவாடி ஒன்றில் மாடாதிபதி ஒருவர் சுங்கக்கட்டணம் செலுத்தமாட்டேன் எனக் கூறியதோடு ஆடைகளைக் களைந்து

கர்நாடக அரசியல் கட்சியின் மூத்த தலைவர் கொரோனாவுக்கு பலி!!! அதிர்ச்சி தகவல்!!!

கர்நாடக மாநிலத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாஜி கவுடா கொரோனாவால் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது