திருச்சி டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம்… முதல்வர் அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சியில் உள்ள டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்த அவர் ராஜகோபுரம் முன்பாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
அப்போது தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். மேலும் மாவட்டத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு திருச்சி டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் முக்கொம்பு கதவணை திட்டப்பணிகள் 3 மாத காலத்திற்குள் செயல்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதோடு வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருக்க வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout