close
Choose your channels

விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல்

Wednesday, October 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில், விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'மர்ம மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வால் மற்றும் பிந்துமாதவி ஆகியோர் முதன்முதலாக விக்ரமுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'மர்ம மனிதன்' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் சென்னையில் தொடங்கும் என்றும், ஐந்து நாட்கள் சென்னை படப்பிடிப்புக்கு பின்னர் படக்குழுவினர் மலேசியா, பாங்காக் மற்றும் லடாக் பகுதியில் நீண்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment