'விஜய் 61' படத்தின் முழு டீம் இதுதான்

  • IndiaGlitz, [Friday,January 27 2017]

'பைரவா' படத்திற்கு பின்னர் விஜய் நடிக்கவுள்ள 61வது படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப டீம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.

நடிகர், நடிகைகள் பட்டியலில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, ஜோதிகா, வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன் மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு, படத்தொகுப்பு ஆண்டனி ரூபன், புரடொக்ஷன் டிசைன் டி.முத்துராஜ் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

'விஜய் 61' படத்தின் டீம் இதுதான் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் முன் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜோதிகாவின் அடுத்தகட்ட பணி தொடக்கம்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகாலம் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.

அஜித், தனுஷ் படங்களை முந்திய 'காற்று வெளியிடை'

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து, தற்போது இரவுபகலாக விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

'பாகுபலி 2' படத்தின் தமிழக உரிமையின் வியாபாரம்

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கடலூர் தியேட்டரில் இளநீர் விற்பனை. ஆரம்பம் ஆனது விழிப்புணர்ச்சி

மாணவர்கள் மற்றும் இளைஞர்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது மட்டுமின்றி மறைமுகமாக பொதுமக்களுக்கு பல விழிப்புணர்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நம்முடைய நாட்டின் நிலத்தடி நீரை உறிஞ்சி அதில் கலர்ப்பொடியும் சர்க்கரையும் கொஞ்சம் விஷத்தையும் கலந்து பெரும் லாபத்துடன் கொள்ளை அடித்து வந்தன &

ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றி கொள்ள மேலும் ஒரு சான்ஸ்?

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.