சுதா கொங்கராவின் ஆச்சரியமான அப்டேட்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக தளபதி விஜய் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் விஜய்யின் அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவது உறுதி செய்யப்பட்டதால் அதன் பின்னர் அவர் அஜித் படத்தை இயக்குவார் என்றும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் இந்த செய்தியை ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அஜித் மற்றும் சுதாகொங்காரா சந்திப்பு நடந்தது என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையில் விரைவில் தன்னுடைய அடுத்த படம் குறித்த ஆச்சரியமான அப்டேட்டை அறிவிக்க இருப்பதாக சுதா கொங்கரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் சுதா கொங்கராவுக்கு டுவிட்டர் பக்கமே இல்லை என்றும், அது அவருடைய பெயரில் உள்ள போலியான பக்கம் என்றும் இதுகுறித்து விசாரித்தபோது தெரிய வந்தது.
Exciting updates on the way....
— Sudha Kongara (@Sudhakongara_of) September 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments