லட்டு பிடிக்கிறவரையும் இந்த கொரோனா விட்டு வைக்கல… திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட பரபரப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகத்துக்கே படியளுக்குற ஏழுமலையான் கோவிலில் தற்போது கொரோனா தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிவரும் காவலர் உள்பட 160 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தேவஸ்தான அறக்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார். இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் அக்கோவிலின் முக்கிய அர்ச்சகர்கள் 14 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்ற செய்தி தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
திருப்பதி தேவஸ்தானம் கடந்த சில வாரங்களாக பக்தர்களின் வருகைக்காகத் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் உள்பட , லட்டு தயாரித்து விநியோகம் செய்யும் ஊழியர்கள் வரை கிட்டத்தட்ட 160 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்றும் அவர்கள் தற்போது திருமலை அர்ச்சகர் பவனில் தனிமைப்படுத்தப் பட்டு இருப்பதாகவும் அறக்காவர் குழுத் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆந்திர போலீஸார் 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதைத்தவிர தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை பிரிவில் பணியாற்றிய 16 பேருக்கும், லட்டு தயாரிப்பு மற்றும் விநியோகத் துறையில் பணியாற்றிய ஊழியர்கள் 14 பேருக்கும், கோவிலின் உள்ளே பணியாற்றும் அர்ச்சகர் உள்ளிட்ட 14 பேருக்கும் என ஒட்டுமொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுப்பாரெட்டி உறுதிப்படுத்தி இருக்கிறார். இத்தகவல் தற்போது இந்தியா முழுக்க கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கொரோனா ஊரடங்கிற்காக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால் உள்ளூரில் உள்ளவர்களைத் தவிர கோவிலுக்கு மற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சென்றிருக்க வாய்ப்பில்லை என்ற நிம்மதியும் ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments