திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை 'மாஸ்டர்' படம் பார்க்க செலவு செய்த இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியிலும் வெளியானது என்பதும், இருப்பினும் இந்த படத்திற்கு இன்னும் திரையரங்குகளில் கூட்டம் வந்து கொண்டிருப்பது ஆச்சரியமான ஒன்றாக கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற சமூக ஆர்வலர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை தனது சொந்த பணத்தில் ‘மாஸ்டர்’ படம் பார்க்க சென்னை ரோஹினி திரையரங்கிற்கு அழைத்து சென்றுள்ளார்
தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணம் நகைகளை அடகு வைத்து மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து உள்ள ஹரிகிருஷ்ணன் அவர்களை ‘மாஸ்டர்’ படத்திற்கு திரையரங்குகளுக்கு அழைத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு வருடமாக காப்பகத்தில் முடங்கியிருந்த குழந்தைகள் முதல் முதலாக வெளி உலகத்திற்கு வந்து ‘மாஸ்டர்’ படத்தை பார்த்து ரசித்தனர். குறிப்பாக திரையரங்கில் வாத்தி கம்மிங் பாடல் ஒளிபரப்பான போது அந்த பாடலுக்கு ஏற்ற வகையில் குழந்தைகள் நடனமாடி மகிழ்ந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Had a special show for less privileged children at our very own main screen at @RohiniSilverScr today !!! #Master
— Rhevanth Charan (@rhevanth95) March 1, 2021
Lovely to see them enjoy!!! Blissful ! pic.twitter.com/h3tPTtvDn4
கொரோனாவால் பல நாட்கள் முடங்கி இருந்த ஆதரவற்ற குழந்தைகள் மாஸ்டர் திரைப்படத்தைப் பார்த்து உற்சாகம்!#SunNews | #Master | #Vijay | #Chennai | @RohiniSilverScr | @actorvijay pic.twitter.com/7qstXhzLRQ
— Sun News (@sunnewstamil) March 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments