இன்று முதல் ஓப்பன் ஆகும் டாஸ்மாக்: எல்லை தாண்ட தயாராகும் சென்னை 'குடி'மகன்கள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகமாக இருந்த காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகளை இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று முதல் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான பாதுகாப்புகள் மற்றும் மது வாங்க வருபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் ஆகியவைகளை நேற்றே காவல்துறையினர் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகியதை அடுத்து சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும் சென்னையைச் சேர்ந்த ’குடி’மகன்கள் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இதனையடுத்து சென்னை குடிமக்கள் மாவட்ட எல்லை தாண்டி மதுபாட்டில்கள் வாங்குவதை தவிர்க்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மதுக் கடைகளில் இருப்பிட முகவரியுடன் கூடிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே மதுபானங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ளவர்கள் அண்டை மாவட்டத்திற்கு சென்று மதுபாட்டில் வாங்குவது உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே சென்னை குடிமக்கள் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் வரை பொறுமையுடன் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

டாஸ்மாக் கடைகள் திறப்பு: முதல் டோக்கன்களை வாங்கிய ஸ்பெயின் குடிமகன்கள்

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை அடுத்து கடந்த 40 நாட்களாக குடிக்காமல் இருந்த குடிமகன்கள் இன்று காலை முதலே டாஸ்மாக் கடைமுன் ஆயிரக்கணக்கில் குவிய

1000க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் மயக்கம்: விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

விசாகப்பட்டினம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆண்கள் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற சென்னை நபர் திடீர் மாயம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று மட்டும் 771 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நடிகையின் தந்தையிடம் வழிப்பறி: வாக்கிங் சென்றபோது நடந்த விபரீதம்

இயக்குனர், நடிகர் எஸ்ஜே சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர்  பிரசாந்தின் 'ஜாம்பவான்' சிபிராஜின் 'லீ' அர்ஜுனனின் 'மருதமலை' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை நிலா.

தமிழகத்தில் 771, சென்னையில் 324: இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்காதது ஆகியவை காரணமாக