சிறையில் சசிகலாவுக்கு சலுகை தரச்சொன்னது யார்? டிஜிபி அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலா தரப்பினரிடம் ரூ.2 கோடி பெற்று சிறையில் சிறப்பு சலுகை செய்து கொடுத்ததாக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி.த ரூபா குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் முதலமைச்சர் சித்தராமையா கூறியதால், சசிகலாவுக்கு சிறையில் கட்டில், தலையணை போன்ற சில சலுகைகள் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் சத்தியநாராணராவின் குற்றச்சாட்டை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய சித்தராமையா, தமிழகத்தில் இருந்து வந்து சிலர் தம்மைச் சந்தித்து, சசிகலாவுக்கு பாய், தலையணைகூட வழங்கப்படவில்லை என்று முறையிட்டதாகவும், சிறைவிதிகளின் படி சசிகலாவுக்கு அளிக்க வேண்டிய வசதிகளை மட்டுமே வழங்க அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

More News

பெரியார் சிலை பிரச்சனை: கருத்தில் முரண்பட்ட கமல்-ரஜினி

பெரியார் சிலை குறித்து கருத்தை பதிவு செய்த எச்.ராஜா, அதன் பின்னர் அந்த கருத்து தன்னுடைய கவனத்திற்கு வராமல் அட்மின் பதிவு செய்த கருத்து என்றும், அதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

பெரியார் சிலை விவகாரம்: குரல் கொடுத்தார் ரஜினி

கடந்த இரண்டு நாட்களாக பெரியார் சிலை விவகாரம் குறித்து தமிழகமே பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றன.

அம்பிகா, லிவிங்ஸ்டன் வாரிசுகள் இணையும் புதிய தமிழ்ப்படம்

நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'கலாசல்' என்ற படத்தின் நாயகியாக நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார்.

ஆய்வாளர் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பெண் மரணம். திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் நேற்றிரவு காவல்துறை ஆய்வாளர் காமராஜ் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்

திருச்சி கர்ப்பிணி பெண் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம்

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உஷா என்ற கர்ப்பிணி பெண்ணை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் எட்டி உதைத்ததால் பரிதாபமாக பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.