வரலாற்று முக்கியத்தும் கொண்ட ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் இனவெறி தாக்குதலில் சிக்கி உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியான போலீஸ்காரர் டெர்ரக் சவுவின் என்பவருக்கு 22 ஆண்டுகள் மற்றும் 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மினசோட்டா மாகாணம், மினியா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட்(46) என்ற கறுப்பினத்தவரை 4 போலீசார் சேர்ந்து கைது செய்ய முற்பட்டனர். அப்போது போலீஸ்காரர் ஒருவர் ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து நெரித்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதோடு இந்த இனவெறித் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கறுப்பினத்தவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்களில் வன்முறை வெடித்தால் மேலும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி டெர்ரக் சவுவின் மற்றும் மற்ற 3 போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. அதில் முக்கிய குற்றவாளியான டெர்ரக் சவுவினுக்கு 22 ஆண்டுகள் மற்றும் 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த தீர்ப்பை இனரீதியான நல்லிணக்கத்திற்காக விதிக்கப்பட்ட வரலாற்று நடவடிக்கை என்று பலரும் வரவேற்று உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments