நடிகை அளித்த புகாரின் அடிப்படையில்  மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...!

  • IndiaGlitz, [Sunday,June 20 2021]


தலைமறைவாகி இருந்த அமைச்சர் மணிகண்டனை இன்று காலை காவல் துறையினர் கைது செய்தனர்.

நடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் நடிகை கருவுற்ற நிலையில், தொடர்ந்து மூன்று முறை சட்டவிரோதமான முறையில் கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். அமைச்சருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கட்சி கூட்டங்களுக்கு செல்லும்போது சாந்தினியைத்தான் தன்னுடைய மனைவி என்றும் எல்லோரிடமும் அறிமுகம் செய்துள்ளார். இந்தநிலையில் நடிகை, அமைச்சரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால், உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மணிகண்டன் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தினி அடையார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


இதைத்தொடர்ந்து தலைமறைவாகி இருந்த மணிகண்டனை, அடையார் மகளிர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் பெங்களூரில் ரகசிய இடத்தில் இவரை கைது செய்தனர். இன்று காலை கைதான மணிகண்டனிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகத்-பிராய்ச்சி மிஸ்ரா மகனின் பெயர் இதுதான்!

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான மகத், பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே

ஒரே காதலில் 2 மாங்கா....!   அம்புவிட்ட அர்ஜுனனுக்கு அடித்த லக்.....!

அத்தை மகள்கள் இருவரின் காதல் பிடிவாதத்தால்,  ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார் மாமன் மகன்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த நடிகரின் மனைவி: திமுகவில் இணைகிறாரா?

பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் மனைவி முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை பாராட்டிய நிலையில் அவர் விரைவில் திமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காஜல் அகர்வால் விரைவில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்: வேண்டுகோள் விடுத்தது யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும், இவர் மும்பையை சேர்ந்த கௌதம் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்

"யுடியூப் டான் மதன்", டம்மி பீஸ் ஆனது  எப்படி...!கோபித்தவனுக்கு குட்டு வைத்த போலீஸ்....!

யுடியூபர் மதன்  தருமபுரியில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, காவல் துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.