உ.பி. முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.விற்கு குடும்பமே சேர்ந்து அடி… உதை… என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாக பாஜக சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்றவர் மாயா ஷங்கர் பதக். இவரை ஒரு கூட்டமே சேர்ந்து அடிப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவருக்கு என்ன நடந்தது என்பது போன்ற விவாதத்தை தற்போது ஊடகங்கள் கிளப்பி உள்ளன.
70 வயதான மாயா ஷங்கர் பதக் சௌபேபூர் மாவட்டத்தின் பலுவா பஹாடியா மர்க் எனும் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் முதல்வராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியாக தவறாகப் பேசினார் எனக் கூறப்படுகிறது. அந்த மாணவி தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறியதாகவும் அதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் கல்லூரிக்கே சென்று அவரிடம் விளக்கம் கேட்டு உள்ளனர்.
மேலும் அந்த மாணவியின் ஒட்டு மொத்தக் குடும்பமும் ஒன்றாகச் சேர்ந்து எம்.எல்.ஏவின் வீட்டிற்கும் சென்று உள்ளனர். அப்போது அவர் குடியரசு தினத்திற்கு வேண்டிய உரையை மாணவி சரியாக தயார் செய்யவில்லை. அதனால் திட்டினேன் எனக் கூறியுள்ளார். ஆனால் இதை ஒப்புக்கொள்ளாத அந்த மாணவியின் பெற்றோர் அவரைத் தாக்கி உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த சௌபேபூர் காவல் துறை இதுகுறித்து விசாரித்தபோது மாணவி மற்றும் எம்.எல்.ஏ எனும் இருதரப்பும் புகார் அளிக்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments