close
Choose your channels

இந்த வாரம் எவிக்சன் ஆகும் 2 போட்டியாளர்களுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா?

Sunday, December 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிக்ஸன் மற்றும் ரவீனா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இருவருக்குமே லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரவீனாவுக்கு ஒரு நாளுக்கு ரூ.18000 சம்பளம் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் பிக் பாஸ் வீட்டில் 90 நாட்கள் இருந்ததை அடுத்து அவருக்கு ரூ.16 லட்சத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் நிக்சனுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 12 ஆயிரம் சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதன்படி அவரும் 90 நாட்கள் தங்கி இருந்ததை அடுத்து அவருக்கு 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் 9 பேர் இருந்த நிலையில் தற்போது இருவர் எவிக்ட் ஆகிவிட்டதால் 7 பேர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் விஷ்ணு ஏற்கனவே டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் இன்னும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போகும் 4 போட்டியாளர்கள் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment