எல்லாம் உங்களுக்காத்தான்..! அருப்புக்கோட்டையில் தீவிர பிரச்சாரத்தில் எடப்பாடியார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும், வைகைச் செல்வனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.மேலும் திருச்சுழி வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்தும் பரப்புரை மேற்கொண்டார்.
பிரச்சார கூட்டத்தில் எடப்பாடியார் பேசியதாவது,
எம்ஜிஆர் முதல் அதிமுக-வில் உள்ள தலைவர்கள் நாட்டிற்காகவே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் திமுக-வினர் அவர்களின் வீட்டை காப்பாத்துவதற்காக மட்டும் வாழ்ந்து வருகிறார்கள். அதிமுகவிலிருந்து, உதயசூரியன் கட்சிக்கு தாவியவர்களுக்கு தற்போது சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஏன் சட்டசபையில் விமர்சித்த செந்தில் பாலாஜிக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். திமுக-வில் கருணாநிதி முதல்வரான பின்பு தான் ஊழல் அதிகமானது. அக்கட்சி தான் வாரிசு அரசியலை பெருக்கிக்கொண்டு வருகிறது. இவர்களின் கட்சியில் சுமார் 13 அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகள் இன்னும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்குகளில் இருந்து அவர்கள் தப்ப இயலாது.
மக்களின் நன்மையை மட்டும் நினைக்கும் அதிமுக, ஆட்சியின்போது 52 லட்சம் விலையில்லா மடிக்கணினிகளை பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கியுள்ளது. 435 அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இதனால் மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேறியுள்ளது. பத்தாயிரம் பசுமை வீடுகள் கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டித்தரப்படும். அருப்புக்கோட்டை மக்கள் உங்கள் கோரிக்கைகளை கூறினால், அவை உடனே நிறைவேற்றப்படும். தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதால், தொண்டை முற்றிலுமாக போய்விட்டது. மருத்துவர்கள் என்னை 1,2 நாட்கள் ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் நான் ஓய்வெடுக்கும் தக்க சமயம் பார்த்து, திமுக புதிய திட்டத்தை வகுத்துவிடுவார்கள்.அதிமுக-விற்காக ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் உழைப்பேன், வெற்றிபெற தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்வேன்.
எனவே மக்களாகிய நீங்கள் இத்தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வைகைச்செல்வன் மற்றும் திருச்சுழி தொகுதியில் களமிறங்கும் மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளர் ராஜசேகர் ஆகியோருக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள்" என்று எடப்பாடியார் மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments