ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ்குட்டி உள்ளார்: மோகன்லாலின் ஆச்சரிய டுவீட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என்று நடிகர் மோகன்லால் சற்று முன் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.
மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘த்ரிஷ்யம் 2’. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் உள்பட பல மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘த்ரிஷ்யம்; திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆனதை அடுத்து ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்திலும் அதே 6 ஆண்டு இடைவெளியில் கதை அமைந்துள்ளது. சந்தர்ப்பவசத்தால் மகள் செய்த கொலையை கச்சிதமாக மறைத்து தண்டனையில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றிய மோகன்லாலுக்கு மீண்டும் அதே கொலை விஷயத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலை அவர் எந்தவித பதட்டமும் இன்றி எப்படி சமாளித்தார் என்பதுதான் ’திரிஷ்யம் 2’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என்றும் நீங்கள் உங்களது ரியல் ஹீரோ குறித்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு ஆச்சரியத்திற்காக காத்திருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Everyone has a person like Georgekutty in their lives. Share a picture of you with your hero and wait for a surprise. ??
— Mohanlal (@Mohanlal) February 26, 2021
Watch #Drishyam2OnPrime now on @PrimeVideoIN
#MeenaSagar #JeethuJoseph @antonypbvr@aashirvadcine @drishyam2movie #SatheeshKurup pic.twitter.com/ddj5kgYfr7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com