ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு மனைவிகள்: இந்தியாவில் ஒரு வினோத கிராமம்

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே இந்தியாவின் கலாச்சாரமாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டுள்ளது வினோதமான ஒன்றாக கருதப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் தேரசர் என்ற கிராமம் உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த கிராமத்து மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்து வருகிறது. அது தான் இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் இரண்டு திருமணம் செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த கிராமத்து இளைஞர்கள் முதல் திருமணம் செய்யும் பெண்ணுக்கு குழந்தை பிறப்பது இல்லை என்பதும் அதனால் தான் அனைத்து ஆண்களும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரியவருகிறது. முதல் மனைவிக்கு குழந்தை ஏன் பிறப்பதில்லை என்பது பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் மர்மமாக இருந்து வருகிறது என்பதும் இதனால்தால் ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து வருகின்றனர் என்பதும் ஒரு வினோதமான செய்தியாகும்

மேலும் இரண்டாவது திருமணம், முதல் மனைவியின் சம்மதத்துடன் செய்யப்படுகிறது என்பதும் இரண்டாவது மனைவியும் முதல் மனைவியும் ஒற்றுமையாக உள்ளனர் என்பதும் இந்த கிராமத்தில் உள்ள இன்னொரு அதிசயம் ஆகும்.

More News

கொரோனா நேரத்தில் ஸ்தம்பிக்கும் இந்திய மாநிலங்கள்!!! காரணம் என்ன???

இந்தியாவில் கொரோனா பரவல், கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இங்கு நிலவும் நிதி நெருக்கடி குறித்த விவாதங்களும் முன்னெடுக்கப் படுகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் அவ்வப்போது

சூர்யா கொடுத்த ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழக எம்பி தெரிவித்த நன்றி

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முதல்கட்ட ஊரடங்கு அறிவித்தபின் பெப்சி தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நிலையில் முதல் முதலாக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்தவர்

ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அரசு அறிவித்த போதிலும் திரைப்படத்துறையினர்களுக்கு

கொரோனா நிதி சர்ச்சை: தளபதி விஜய்க்கு ஆதரவு அளித்த சிம்பு தயாரிப்பாளர்!

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் தனது ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு