சன்னிலியோனுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு இல்லை. வேலுபிரபாகரன்

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் இன்று நடிகை ஷெர்லியை திருமணம் செய்த நிலையில் அவர் அளித்த பரபரப்பான பேட்டி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பேட்டியில் இன்றைய காலத்தில் ஆபாசம் அனைவரின் கையில் உள்ளது என்றும், ஆபாச படங்களையும் நாம் இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் அந்த பேட்டியில் கூறியதாவது: நான் ஒரு படம் இயக்குகிறேன் என்றதும் என் பெயரை கேட்டதும் எந்த நடிகையும் நடிக்க முன்வரவில்லை. அதற்கு காரணம் மீடியாக்கள் என்னை பற்றிய தவறான செய்தியை வெளியிடுவதுதான். வேலுபிரபாகரன் என்றாலே செக்ஸ் படம் எடுப்பவர், பெண்களை ஆபாசமாக காட்டுபவர் என்ற ஒரு மாயையை மீடியா உருவாக்கிவிட்டது. சன்னிலியோனுக்கு கொடுக்கும் மரியாதையை கூட எனக்கு மீடியாக்கள் கொடுக்கவில்லை.

இன்றைய இந்தியாவில் நடைபெறும் குற்றங்களில் 80% பாலியல் குற்றங்கள் தான். இன்று அனைவரின் கையிலும் ஆபாச படங்கள் உள்ளது. முன்பெல்லாம் ஒரே ஒரு ஆபாச புகைப்படம் பார்ப்பதே பெரிதான விஷயம். ஆனால் இன்று அப்படியில்லை. ஒரு பெண்ணை முழுதாக நான் 28 வயதில் தான் பார்த்தேன். ஆனால் இன்றைய இளைஞர்கள் 15 வயதிலேயே அனைத்தையும் அனுபவித்து விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.