பிரதமர் பதவி கொடுத்தாலும் இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டேன்: 2 எம்பிக்கள் வைத்துள்ள பிரபல நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் பதவி கொடுத்தால் கூட மோடியை விட்டுவிட்டு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என இரண்டு எம்பிக்கள் வைத்துள்ள பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 293 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தான் ஆட்சி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளில் ஒன்றான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆந்திராவில் இரண்டு எம்பி தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் அந்த கட்சிக்கு இரண்டு எம்பிக்கள் உள்ளனர். அதேபோல் அந்த கட்சியின் 21 பேர் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் ஆகவுள்ளனர். பவன் கல்யாண் தான் போட்டியிட்ட பித்தாபுரம் தொகுதியில் 70ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க சில அரசியல் கட்சி எம்பிக்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் பவன் கல்யாண் இது குறித்து தெரிவித்த போது ’மோடி ஒருவர் தான் எங்களுக்கு முக்கியம், இந்தியா கூட்டணி ஒருவேளை எனக்கு பிரதமர் பதவி தருவதாக கூறி அழைத்தால் கூட நான் செல்ல மாட்டேன், இந்தியாவுக்காக மோடி என்ன செய்தார் என்பது இந்த உலகத்திற்கே தெரியும்’ என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments