பிச்சை கூட எடுங்க,திருடுங்க ...! உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பளார் கேள்வி....!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதால், பிச்சை கூட எடுங்க, பரவாயில்ல என உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு பளார் கேள்வி கேட்டுள்ளது.

இந்தியாவில் 2-ஆம் கட்ட அலையாக கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் செய்தி, கடும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளிலும் நோயாளிகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. படுக்கை தட்டுப்பாடுகள், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, மஹாரஷ்டிரா உள்ளிட்ட நகரங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ்களில் நிறுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையினாலும் கண்முன்னே உயிரிழக்கும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின.

முக்கியமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு டெல்லியில் அதிகமாக இருப்பதால், மக்கள் மிக மோசமான நிலையில் உள்ளனர். இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சீர்செய்ய உதவுமாறு, அம்மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இக்கடுமையான சூழலில் மக்களின் உயிரை காப்பாற்றவேண்டியது அரசின் கடமையே,, ஆனால் மக்களின் உயிர்மேல் அரசுக்கு அக்கறை இல்லை எனத் தோன்றுகிறது. மக்களுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யவேண்டுமென்றால், பிச்சை கூட எடுங்கள் என்று மத்திய அரசை, டெல்லி உயர்நீதி மன்றம் கடுமையாக சாடியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பள்ளி உள்ளிட்டோர் தலைமையில் நடந்த அமர்வில் கூறியிருப்பதாவது,

நாட்டில் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் கொரோனா பாதிப்பு என்பது 2 மடங்கு அதிகமாகி வருகிறது. ஆனால் அரசு உண்மை நிலையை அறிந்தும், கண்டுகொள்ளாமல் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று புரியவில்லை..?

ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்த வெளிப்பாடான உண்மையே. இதில் பொய்கூற ஒன்றுமில்லை. அரசு கண்களை மூடிக்கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் கண்டும்காணாமல் போல் இருக்கிறது அரசு.

மக்கள் செத்தால் சாகட்டும் என்று நினைக்கமுடியாது,மக்களுடைய அடிப்படை தேவைகளை நிரப்ப வேண்டியதே அரசின் கடமை. அதனால் பிச்சை எடுங்கள், திருடுங்கள் அல்லது கடன் வாங்குங்கள், என்னவோ செய்யுங்கள், ஆனால் மக்களின் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் இறப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று டெல்லி உயர்நீதி மன்றம், மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது.
 

More News

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புக்காக மீண்டும் திறக்கலாம்… மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் பெற்று வருகிறது.

தாண்டவமாடும் கொரோனா...! மஹாராஷ்டிராவில் வரும் புதிய கட்டுப்பாடுகள்...!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. 

ஒரு உடைக்கு இத்தனை லட்சமா? பாலிவுட் நடிகையின் தெறிக்கவிடும் பேஷன் பிக்!

தமிழில் தளபதி விஜய் நடித்த “தமிழன்” படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. உலக அழகிப் பட்டம் வென்ற இவர் இந்தி சினிமா, அடுத்து ஹாலிவுட் என்று ரவுண்டு கட்டி கலக்கி வருகிறார்.

குத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழுச்சி ஊட்டும் ஆடியோ!

குத்துச் சண்டை போட்டிகளில் மறக்க முடியாத ஒரு பெயர் முகமது அலி. அமெரிக்க குத்துச்சண்டை வீரரான முகமது அலி கலந்து கொண்ட போட்டிகளைப் பார்த்து இன்றைய தலைமுறை இளைஞர்களும் மிரண்டு போகின்றனர்.

அந்தக் கன்னக்குழி அழகில்… இளம் நடிகை பதிவிட்ட வைரல் போட்டோ ஷுட் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் வலம் வரும் இளம் நடிகை சிருஷ்டி டாங்கே. இவருடைய கன்னக்குழி அழகிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.