close
Choose your channels

லோகேஷ் கனகராஜ்-கமல்ஹாசன் படத்தின் டைட்டிலுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு:

Wednesday, September 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாநகரம், கைதி ஆகிய படங்களை அடுத்து தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ என்ற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நாம் இன்று காலை கூறியபடி ’எவனென்று நினைத்தால்’ என்பதுதான் லோகேஷின் அடுத்த பட டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் கமலஹாசன் நடிக்கவுள்ளார் என்பதும், கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் கமல்ஹாசனின் 232வது திரைப்படமான இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் லோகேஷ் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடித்து தயாரிக்கவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment